கல்லக்குடியில் தடை செய்யப்பட்ட 14 கிலோ போதை பொருள் பறிமுதல்
மே 3 லால்குடி அருகே கல்லக்குடியில் அக்பர் அலி என்பவர் தனது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை,குட்கா, பான்பராக் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு அலுவலர் அன்புச்செல்வன் அவர்களுக்கு தகவல் கிடைத்தது.இத்தகவலின் பெயரில் அவரது கடையில் ஆய்வு செய்யப்பட்டது.ஆய்வின் போது 14 கிலோ போதைபொருள் பறிமுதல் செய்து கல்லக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.கல்லக்குடி காவல்நிலையம் புகார் பதிவு செய்துள்ளனர்.