கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம், லால்பேட்டையில் மீன்வளத்துறை வாயிலாக மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு
கடலூர்மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் இன்று
(18.11.2022)
காட்டுமன்னார்கோயில் வட்டம் லால்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை
மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு மீன்குஞ்சு வளர்ப்பு பண்ணையில் கட்லா,
ரோகு, மிர்கால் மற்றும் சாதாகெண்டை வகை மீன்குஞ்சு வளர்ப்பு பணிகளை ஆய்வு
செய்தார். மேலும் அப்பண்ணையில் மேற்கொள்ளப்பட்டு வரும், சினை மீன்வளர்ப்பு மற்றும் கெண்டையின மீன்குஞ்சு பொறிப்பக கட்டுமான பணிகள் மற்றும் விரால்
மீன்குஞ்சு பொறிப்பக கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.