உபதேசியார்கள்-பணியாளர்கள் நலவாரியத்தில் அலுவலர் சாரா உறுப்பினர் நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம்!

பெரம்பலூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களை கொண்டு, அவர்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நலவாரியத்தின் மூலம் நலவாரிய உறுப்பினர்களுக்கு முதியோர் ஓய்வூதிய திட்டம், ஈமச்சடங்கு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்தினால் ஏற்படும் மரணம் மற்றம் நிவாரணத்தொகை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேற்படி நலவாரியத்தில், அலுவல் சாரா உறுப்பினர்களை நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த, சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்து கொண்டவர் மற்றும் சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை உடையவர்களாக இருத்தல் வேண்டும். எனவே, விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விபர குறிப்புகளுடன் இரட்டை பிரதிகளில் விண்ணப்பித்தல் வேண்டும். நலவாரியம் மூலம் தகுதியான விண்ணப்பங்கள் அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்பப்படும். கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *