நீருக்கடியில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் கொல்கத்தாவில் வெற்றிகரமாக நடந்தது.
சென்னை உட்பட நாடு முழுவதும் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. சுரங்கப்பாதை, உயர்ந்த பாலங்கள் என மெட்ரோ பாதைகள் உள்ளன. இந்நிலையில், நாட்டிலேயே முதன்முறையாக நீருக்கடியில் மெட்ரோ ரயில் திட்டம் கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்டு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஹூக்ளி நதிக்கடியில் உருவாக்கப்பட்ட மெட்ரோ பாதையில் மேற்கொள்ளப்பட்ட மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் குறித்த வீடியோ ஒன்றையும் நிர்வாகம் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.சாலை போக்குவரத்தில் உள்ள சிக்கல்களை சரிசெய்யவும், மக்களின் பயணத்தை எளிதாக்கவும் மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்தப்பட்டது. சென்னை, டெல்லி, பெங்களூர், புனே உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
நாட்டிலேயே முதன்முறையாக கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி நதிக்கடியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியாக இது கருதப்படுகிறது. அதிவேகம் ரயில் சேவை திட்டத்தில் முக்கிய மைல்கல் இந்த திட்டம். ஹவுரா முதல் எஸ்பினேடு வரை அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
ஹுக்ளி நதிக்கடியில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் பாதை தெளிவாக திட்டமிடலுடன் அமைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கொல்கத்தா மெட்ரோவில் பொது மேலாளர் பி. உதய் குமார் ரெட்டி கூறுகையில், ‘நீருக்கட்டியில் மெட்ரோ சோதனை ஓட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பது வரலாற்று மைல்கல். ஹூக்ளி நதிக்கடியில் ரயில் சென்றது இதுவே முதல்முறை.
நாட்டிலேயே பூமிக்கடியில் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரொ ரயில் பாதை. 33 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்று பெருமைகளை உள்ளடக்கிய கொல்கத்தாவிற்கு மேலும் சிறப்பினை வழங்கக்கூடிய தருணம் இது. 7 மாதங்களுக்கு பிறகு இந்த பாதையில் மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டிற்கு வரும்’ என்றார். இந்த ரயில் சேவை தொடங்கும்போது, நதிக்கு அடியில் செல்லும் 520 மீட்டர் தூரத்தை 45 விநாடிகளில் ரயில் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிலளிமுன்அனுப்பு
|