பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவர் சிக்கினார்…!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா கல்லிடைக்குறிச்சி பகழி கூத்தர் தெருவை சேர்ந்தவர் காவையா. இவருடைய மகன் நாகராஜன் (வயது 27). கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்ததும் அந்த பெண்ணின் கணவர் இதுபற்றி, நாகராஜனின் தந்தையிடம் தெரிவித்தார். இதையடுத்து காவையா தனது மகனை அழைத்து கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜன், அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த அந்த பெண்ணின் கணவரிடம் வாக்குவாதம் செய்தார். தகராறு முற்றியதில் அந்த பெண்ணின் கணவரை நாகராஜன் தாக்கியும், அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *