டியூசன் வந்த மாணவனிடம் “ஓரின சேர்க்கைக்கு” முயன்ற ஆசிரியர் கைது!

மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருணாசலம்(வயது 27). இவர் ஒரு தனியார் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். மேலும் தனது வீட்டில் டியூசன் நடத்தி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலையில் அவரது வீட்டுக்கு 12 வயது மாணவன் ஒருவன் டியூசனுக்காக சென்றான். ஆனால் மற்ற மாணவர்கள் யாரும் வரவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைத்த ஆசிரியர் அருணாசலம், அந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, ஓரின சேர்க்கையில் ஈடுபட முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன், அவரிடம் இருந்து தப்பிச்சென்று, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறினான். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அருணாசலத்தை கைது செய்தனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *