“வைக்கோல் போரில் இருந்த நாட்டுத் துப்பாக்கியை” கண்டு உரிமையாளர் அதிர்ச்சி!

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் தங்கமணி (வயது 55). இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக வயல் உள்ளது. இந்நிலையில் தங்கமணியின் மகன் ரத்னகிரி(36) மாட்டிற்கு தீவனம் வைப்பதற்காக வயற்காட்டில் உள்ள வைக்கோல் போரில் கட்டுகளை நகற்றி வைக்கோலை உருவியுள்ளார். அப்போது வைக்கோர் கட்டுக்குள் நாட்டு துப்பாக்கி ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தாார். பின்னர் இது குறித்து உடனடியாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் வைக்கோல் கட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *