மது போதையில் தாயை கட்டிப்போட்டு உயிருடன் எரித்த கொடூர மகன் கைது!
கன்னியாகுமரி மாவட்டம் கேரள மாநில எல்லைக்குட்பட்ட வெள்ளறடைகாற்றாடி பகுதியை சேர்ந்தவர் நளினி. இவருக்கு மோசஸ் என்ற மகன் உள்ளார். இதில் மகன் மோசஸ் வேலைக்கு எங்கும் போகாமல் மது மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளார். மேலும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் மோசஸ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை மோசஸ் தனது தாயாரிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இதில் தாய் பணம் தராததால், ஆத்திரமடைந்த மோசஸ் தாய் நளினியை கட்டி போட்டு உயிருடன் தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் நளினி கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து நளினியின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தி னர் ஓடி வருவதற்குள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வெள்ளறடை போலீசார் வழக்கு பதிவு செய்து மோசஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.