பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த கோரி,தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கத்தினர்,மே 2ஆம் தேதி சென்னையில் ஆசிரியர்கள்மறியல் போராட்டம். விழுப்புரத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு
விழுப்புரத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் , செயலாளர்கள் கூட்டம் கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மு லட்சுமிநாராயணன்
தலைமை தாங்கினார், கூட்டத்தில் பேரியக்கத்தின் பொதுச்செயலாளரும், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணைப் பொதுச் செயலாளரும், உலக தமிழாசிரியர் பேரவையின் பொதுச் செயலாளருமான ந.ரெங்கராஜன் கலந்துகொண்டு இயக்க செயல்பாடுகள் மற்றும் இயக்க நடவடிக்கைகள் குறித்து இயக்கப் பேருரை ஆற்றினார். மற்றும் மாநிலத் துணைத் தலைவர்கள், மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்,
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டமிட்டபடி ஏப்ரல் 8ஆம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம். மே 2ஆம் தேதி சென்னையில் மறியல் போராட்டம். விழுப்புரத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு,





*ஏப்ரல் 8ஆம் தேதி சென்னையில் மாபெரும் கவனயீர்ப்பு உண்ணாவிரதம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி,மே 2ஆம் தேதி சென்னையில் மறியல் போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
*இப்போராட்டங்களில் 5ஆயிரம் பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட 10 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
*மே மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி மாநாட்டில் தமிழகத்திலிருந்து 700 ஆசிரியர்கள் பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
*ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு கலந்தாய்வு ஆகியவைகளை முறைப்படி உடனடியாக நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
* நாட்டின் தலைநகர் காட்மண்டில் நடைபெறும் சார்க் நாடுகளின் ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநாட்டில் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. ஏப்ரல் 7ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 9ஆம் தேதி ஈஸ்டர் திருநாள் ஆகிய நிகழ்வுகள் இருந்த போதும், இயக்கத்தின் பெருமை கருதி திட்டமிட்டபடி *ஏப்ரல் 8ஆம் தேதி போராட்டம் நடத்தப்பட வேண்டும்.* போராட்டம் வெற்றிகரமாக நடைபெற உறுதுணையாக இருப்போம் என அப்பண்டிகைகளை கொண்டாடும் மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்கள் தெரிவித்திருப்பதாக மாவட்டச் செயலாளர்கள் கூறிய கருத்துக்களை ஏற்று, அவர்களுக்கு பொதுச்செயலாளர் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். தீபாவளி பண்டிகை நாளில் இயக்கம் அறிவித்த அழைப்பை ஏற்று போராட்டத்தில் பங்கேற்று சிறையில் இருந்த பெருமை நம்முடைய இயக்க ஆசிரியர்களும் உண்டு. இந்த இயக்கம் அரசியல், சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம் என்பதை இப்போராட்டத்தின் மூலம் மீண்டும் நிரூபிக்க உள்ளோம் எனவும் பொதுச்செயலாளர் தெரிவித்தார். போராட்டத்தை தொடர பெருந்தன்மையுடன் ஆதரவளித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.கூட்டத்தில் நிறைவாகமாநில பொருளாளர் குமார் நன்றி கூறினார் ..