அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை மறுநாள் கடைசி நாள்”

அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர் சேர்க்கை கடந்த 6-ந்தேதி தொடங்கியது

சென்னை, தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை , அறிவியல் கல்லூரிகளில் 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கானமாணவர் சேர்க்கை கடந்த 6-ந்தேதி தொடங்கியது.உயர்கல்வியை தொடர விரும்பும் ஏழை, எளிய மாணவர்கள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர்.இதுவரை விண்ணப்ப பதிவு 2 லட்சத்தை கடந்து உள்ளது. இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். . விண்ணப்பிக்க 2 நாட்கள் இருப்பதால் இன்றும் நாளையும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு அடுத்த மாதம் 6-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதுபோல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் விண்ணப்பிக்க அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial