சிறப்பு ரயில்கள் இயக்கம்!
பயணிகளின் நலனுக்காகவும், கூட்ட நெரிசலை குறைக்கவும் டாடாநகர் – எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-ஜார்கண்ட் மாநிலம் டாடாநகரில் இருந்து வரும் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு எர்ணாகுளம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்.08189) மறுநாள் அதிகாலை 1.55 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். மறுமார்க்கமாக, எர்ணாகுளத்தில் இருந்து வரும் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 7.15 மணிக்கு புறப்பட்டு டாடாநகர் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (08190) மறுநாள் காலை 4.35 மணிக்கு டாடாநகர் சென்றடையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.