விடுமுறையையொட்டி பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கும்பகோணம் லிட் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-தை அமாவாசை மற்றும் வாரவிடுமுறை நாட்கள் என தொடர் விடுமுறை வருவதன் காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை பொதுமக்கள் பயணம் செய்ய கூடுதலாக சிறப்பு பஸ்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கும்பகோணம் லிட் சார்பில் இயக்கப்படுகிறது. நாளை(வெள்ளிக்கிழமை) தை அமாவசையை முன்னிட்டு ராமேஸ்வரம், தேவிப்பட்டினம், சேதுக்கரை, வேதியரேந்தல், கோடியக்கரை, பூம்புகார், திருவையாறு, கும்பகோணம்(மகாமக குளம்), வேதாரண்யம், மானாமதுரை, திருச்சி (ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்) ஆகிய ஊர்களுக்கு இன்று(வியாழக்கிழமை) முதல் 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய ஊர்களில் இருந்து இயக்கப்பட உள்ளது. 10, 11-ந் தேதிகளில் வார விடுமுறை நாட்கள் என தொடர்ந்து பொதுமக்கள் அதிகஅளவில் பஸ்களில் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதனை முன்னிட்டு இன்று(வியாழக்கிழமை) முதல் நாளை(வெள்ளிக்கிழமை) வரை பொதுமக்கள் பயணம் செய்ய கூடுதலாக சிறப்பு பஸ்கள் சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கும், திருச்சியில் இருந்து தஞ்சை, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும், மதுரை, கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்துக்கழக இயக்க பகுதிக்குட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இயக்கப்பட உள்ளது. மேலும் விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 11, 12-ந் தேதிகளில் திருச்சியில் இருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், சிவகங்கை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கு இரவு 9.30 மணி வரையிலும், பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் அனைத்து ஊர்களின் பஸ் நிலையங்களிலும் பயணிகள் வசதிக்காக சேவை மையங்கள் இரவு பகலாக செயல்பட உள்ளது. அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் பஸ்களுக்கும் முன்பதிவு சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.