“சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து” உயிர் சேதம் தவிர்ப்பு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதூர் பகுதியில் பட்டாசு ஆலையில் இன்று (மே 11) வெடிவிபத்து ஏற்பட்டது. 2 அறைகள் தரைமட்டமாகின. காலை நேரத்தில் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
கடந்த மே 9ம் தேதி செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். 9 பெண்கள் உட்பட 14 பேர் காயமடைந்தனர். 7 அறைகள் தரைமட்டமாகின. ஒரே வாரத்திற்குள் இரண்டு வெடிவிபத்து நடந்த சம்பவம் பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.