தந்தை கண்டித்ததால் ஆசிட்டை குடித்து பள்ளி மாணவி தற்கொலை!
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள மேலராதாநல்லூர் ஊராட்சி வடபாதியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 40). இவருடைய மகள் பிரியதர்ஷினி(16). இவர், கூத்தாநல்லூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பிரியதர்ஷினி பொதுத்தேர்வுக்கு படிக்காமல் நீண்ட நேரம் செல்போன் பார்த்துக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதை அவரது தந்தை மணிமாறன் கண்டித்தார். இதனால் மனவேதனையில் இருந்த பிரியதர்ஷினி, தனது பெற்றோர் வெளியூர் சென்றிருந்தபோது வீட்டில் இருந்த கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஆசிட்டை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.