நெய்வேலி அருகே ஆம் ஆத்மி கட்சி கொடி கம்பத்தை வருவாய் துறையின் அகற்றியதால் சாலை மறியல்
- நெய்வேலி அருகே ஆம் ஆத்மி கட்சி கொடி கம்பத்தை வருவாய் துறையின் அகற்றியதால் சாலை மறியல்
கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியினர் கொடி கம்பம் வைத்து இன்றைய தினம் நெய்வேலியில் கட்சி அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற இருந்த நிலையில் இன்று ஞாயிறு காலை அனுமதியின்றி கொடிக்கம்பம் வைத்ததாக வருவாய்த் துறை நகர் மற்றும் காவல்துறையினர் கொடி கம்பத்தை அகற்றி உள்ளனர், இதில் ஆத்திரமடைந்த ஆம் ஆத்மி கட்சியினர் கடலூர் விருத்தாச்சலம் சாலையில் நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி டிஎஸ்பி தலைமையிலான போலீசார் உரிய அனுமதி இல்லாமல் கொடிக்கம்பம் வைத்துதால்தான் அகற்றப்பட்டது எனவும் வட்டாட்சியரிடம் முறையான அனுமதி பெற்று கொடி கம்பத்தை வைத்துக் கொள்ளலாம் என உறுதி அளித்ததை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியினர் கலைந்து சென்றனர், இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது