கரைமேட்டு ஐய்யப்பனுக்கு படி பூஜை…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கரைமேட்டில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் விநாயகர், முருகன் பல்வேறு தெய்வங்களுக்கு பல்வேறு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து கோவிலில் தனி சன்னதி கொண்டுள்ள ஐய்யப்பனுக்கு 21 பால், தயிர், இளநீர் உள்பட அபிஷேகம், விளக்கு பூஜை, படி பூஜை, கன்னி பூஜை நடைபெற்றது. பின்னர் மாலை 6 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி ஐய்யப்பனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட ஐய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஐய்யப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.

எங்கள் WhatsApp குழுவில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…

https://chat.whatsapp.com/DoqmK1z6vKpKGOgRGyDo4T

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *