இலையூர் மகளிர் சுய குழுக்கள்- ஊராட்சி இணைந்து நடத்திய பொங்கல் விழா!
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா அனைத்து கிராமங்களிலும் சிறப்பாக கொண்டாட தயாராகி வருகின்றனர். விவசாயிகளுக்கு வாழ்வளிக்கும் நிலத்தில் அறுவடை செய்த புது நெல்லில் இருந்து பொங்கல் இட்டு சூரிய பகவானுக்கு நன்றி தெரிவித்து உழவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு மரியாதை செய்யும் வகையிலும் மாட்டுப் பொங்கல் வைத்தும், வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தியும் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றனர். அதன்படி இலையூர்
ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் அறிவழகன் தலைமையில் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன் தேவி முன்னிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சுய உதவிக் குழு பெண்கள் கோலமிட்டு புதுப்பாணையில் பொங்கல் வைத்தனர். பின்னர் மஞ்சள் வாழைப்பழம் செங்கரும்பு வைத்து சூரியனுக்கு படைக்கப்பட்டு அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. விழா குழு குழுக்கள் மகளிர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர் தமிழர்களின் ஆண்கள் பாரம்பரிய வேஷ்டி-சட்டை அணிந்தும், பெண்கள் சேலை அணிந்தும் வந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி துறை ஒருங்கிணைப்பாளர் காவியா, ஊராட்சி உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் 64 சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 1,300 பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டனர்.