முதல்வர் ஆக்கிய சசிகலாவையே, ஜெயிலுக்கு அனுப்பியவர்.எடப்பாடி பழனிசாமி,அமைச்சர் எம்ஆர் கேபன்னீர்செல்வம் பேச்சு,
கடலூர், மாவட்டம்,வடலூரில் நகர தி.மு.க. சார்பில் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நகராட்சி அலுவலகம் எதிரே நேற்று இரவு நடந்தது.
வடலூர் நகர செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.
நகராட்சி சேர்மன் சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார்.
துணைசேர்மன் சுப்புராயலு முன்னிலை வகித்தார். மாவட்ட கழக செயலாளரும்,தொகுதி எம்எல்ஏ, வேளாண்மைதுறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், கலந்து கொண்டு பேசினார்.
குறிஞ்சிப்பாடி தொகுதியில் என்னை ஐந்து முறை எம் எல் ஏ வாக தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு நான் என்றும் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன். நாங்கள் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் வடலூருக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். புதிய பஸ் ஸ்டாண்ட், புதிய நகராட்சி அலுவலகம், அரசு கலைக்கல்லூரி,
ரூ 100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம். இப்படி பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.
வரும் செப்டம்பர் 15 முதல் தகுதியான ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய், தரப்படும். பெண்களுக்கு இலவச பாஸ், வழங்கப்பட்டது,இதில் இதுவரை 7 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளனர். அரசுப்பள்ளியில் படித்த பெண் பிள்ளைகள் படிப்புக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.எடப்பாடி பழனிசாமி , சசிகலா தயவில் முதல்வர் ஐந்து, அதே சசிகலாவை, ஜெயிலுக்கு அனுப்பி, நம்பிக்கை துரோகம் செய்தவர், மக்களுக்குஇல்லம் தேடி மருத்துவ வசதி, ஒன்று முதல் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு, காலை உணவு வழங்கப்படுகிறது, கடலூர் மாவட்டத்தில் 181 கூட்டுறவு வங்கிகளில் ஐந்து
பவுன்வரை நகை அடகுவைத்தவர்களுக்கு ரூ114 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்துள்ளோம். ஆவின்பால் விலை ரூ.3 ரூபாய் குறைத்துள்ளோம். ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு, மகளிர் சுய உதவிகளுக்கு மான்ய கடன் இப்படி பல்வேறு நல்ல திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம்.இவ்வாறு எம்ஆர் கே பன்னீர்செல்வம் பேசினார்.
கூட்டத்தில் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் இன்ஜீனியர்சிவக்குமார், பொதுக்குழுஉறுப்பினர் பாலமுருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் தண்டபாணி, வடலூர் நகர நிர்வாகிகள், கோவிந்தராஜ் ,பழனி ,பத்மாவதி,
சாகுல்ஹமீது, சந்துரு, ராமசாமி, அழகப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர பொருளாளர் விஜயராகவன் நன்றி கூறினார்.