விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் 2வது வாரத்தில் வெளியீடு!
துணிவு படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ படத்தில் ‘நடித்து வருகிறார்.இதில் அஜித்துடன் திரிஷா, ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன், ‘பிக் பாஸ்’ ஆரவ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ‘பர்ஸ்ட்லுக்’ பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறது படக்குழு.