திருநெல்வேலி பொருணை அருங்காட்சியகம் கட்டுமானப் பணி பார்வையிடல்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டம் ரெட்டியார்பட்டி மலையடிவாரத்தில் உலக தரத்துடன் அமைக்கப்பட உள்ள பொருணை அருங்காட்சியகம் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு ஏவா வேலு அவர்கள் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு பிரதீப் யாதவ் இ ஆ பா மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா பா கார்த்திகேயன் இ ஆ பா அவர்கள் தலைமையில் இன்று 22/5/2023 பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் உடன் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் திரு சா ஞானத் திரவியம் அவர்கள் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் அவர்கள் முன்னாள் சட்டமன்ற பேரவை தலைவர் திரு இரா ஆவுடையப்பன் அவர்கள் துணை மேயர் திரு கே ஆர் ராஜு அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்