“அள்ள அள்ள தங்கம்.. பழனி முருகன் கோவிலில் உண்டியலை திறந்தால்… சிலிர்க்க வைத்த பக்தர்கள்”
திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2.25 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது தவிர தங்கம், வெள்ளி நகைகள் ஏரளமாக கிடைத்தது. உலகப்புகழ் பெற்ற முருகன் கோயில்களில் முதன்மையான கோயில் பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் தான். இந்த கோயிலுக்கு தமிழகத்தை தாண்டி கேரளாவில் இருந்து ஏரளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள். பழனிக்கு என்றே ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து தரிசனம் செய்வார்கள். குறிப்பாக பொதுவாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் முருக பெருமானை தரிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அந்த காலக்கட்டத்தில நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு பல நாட்கள் கூட்டம் அலைமோதும். அதேநேரம் மற்ற நேரங்களில் விஷேச நாட்களில் மற்றும் வெள்ளி, செவ்வாய்கிழமைகளில், ஞாயிறுகளில் பழனி முருகன் கோயிலுக்கு கூட்டம் அதிகமாகவே இருக்கும். ‘இதுதவிர முருக பெருமானை தரிசனம் செய்ய தினமும் திரளான பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். அவர்கள் கோவிலில் தரிசனம் செய்த பின்பு அங்குள்ள உண்டியல்களில் பணம், நகை, நவதானியங்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இவை கோவில் நிர்வாகம் சார்பில் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை எண்ணப்பட்டு வருகிறது. . அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 8-ந்தேதி பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதையடுத்து பழனி கோவிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கார்த்திகை மண்டபத்தில் நடந்தது. இதற்கு கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் இந்த பணி நடந்தது. இதில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம், வெள்ளி நகைகள் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை தனித்தனியாக பிரிக்கப்பட்டது. அதன் பின்னர் பணத்தையும், நாணயங்களையும் எண்ணும் பணியினை கோவில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர். முதல் நாள் எண்ணும் பணி முடிவடைந்தது. அதில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 24 லட்சத்து 86 ஆயிரத்து 568 கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர். இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 409 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்க பொருட்கள் 848 கிராம், வெள்ளி வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 13 கிலோ 575 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.