கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த மேல் பாப்பனாம்பட்டு கிராமத்தில் எழுந்திருளியுள்ள, ஸ்ரீ வெற்றி விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கிய நிகழ்வானது, முதற்கால பூஜை நடைபெற்று, மஹாபூர்ணாகதி அடைந்தது. அதைத் தொடர்ந்து இன்று மங்கல வாத்தியங்கள், முழங்க, கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் ஆலயத்தின் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாவதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது