புதுடில்லி: ‘மகாலட்சுமி யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.1 லட்சம் பெற்று, ஒவ்வொரு ஏழைப்பெண்ணும் சொந்த காலில் நிற்க காத்திருக்கின்றனர்’ என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திதெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ;பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக, மக்களை பிரதமர் மோடி அவதிக்குள்ளாக்கினார். மேலும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக வரிசையில் நின்று அவர்களை அழ வைத்தார், போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்களை வழக்கில் சிக்க வைத்து, நீதிமன்றத்தை பிரதமர் மோடி நாட வைத்தார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.காங்கிரஸ் ஆட்சியில், மகாலட்சுமி யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.1 லட்சம் பெற்று, ஒவ்வொரு ஏழைப்பெண்ணும் சொந்த காலில் நிற்க காத்திருக்கின்றனர் என்றும் மகாலட்சுமி யோஜனா திட்டம் ஏழைக் குடும்பங்களின் உயிர்நாடியாக மாறப் போகிறது என்றும் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.