ஓய்வின்றி உழைப்போம்; இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்; மு.க.ஸ்டாலின்!
நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்பதை உறுதிசெய்யும் விதமாக மிக எழுச்சியோடு பிரமாண்டமாக தமிழ்நாடெங்கும் நடந்தேறியுள்ளன ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக்கூட்டங்கள். வெற்றிகரமாக இந்த கூட்டங்களை ஒருங்கிணைத்த மாவட்ட கழகச் செயலாளர்கள் கழக முன்னணியினர் என அனைவர்க்கும் பாராட்டுகள். நன்றி. வெற்றியை நோக்கிய நம் பயணத்தில் அடுத்த 100 நாட்களும் மிக முக்கியமானவை. கடமையுணர்வோடு ஓய்வின்றி உழைப்போம்; இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.