பிரதமரின் கல்லூரி சான்றிதழை காட்டச் சொல்லி கேட்ட கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம்

குஜராத் உயர்நீதிமன்றம் பிரதமரின் கல்லூரி சான்றிதழை காட்டச் சொல்லி கேட்ட கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து விட்டு, மோடியின் கல்லூரி சான்றிதழை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று தீர்ப்பு சொல்லி உள்ளது.

புலனாய்வு நிறுவனங்களை ஒன்றியரசு எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தவறாக பயன்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்த கோரி நாட்டின் 14 முக்கிய எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கின் முக்கியத்தை கருத்தில் கொள்ளாமல் தள்ளுபடி.,அவதூறு பேசியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் 2 வருட தண்டனை, அதை தொடர்ந்து எம்.பி,பதவி பறிப்பு , வீடு காலி செய்ய நோட்டீஸ்.

இப்படிப்பட்ட தீர்ப்புகள் நாட்டிலுள்ள சாதாரணமான மக்களுக்கு நீதிமன்றங்கள் மீதுள்ள நம்பகத்தன்மையை குறைத்து விடாதா.?.

சில நீதிபதிகள் தங்களது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப தீர்ப்புகள் சொல்லுவதை தவிர்க்க, நாட்டின் சட்ட நிபுணர்கள் கூடி ஒரு மாற்று வழி கண்டறிய வேண்டும். என,எதிர்கட்சிகளின் கருத்தாக உள்ளது,

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *