கீழப்பழுவூர் காவல் நிலைய சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ் வழங்கி பாராட்டு.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் காவல் நிலைய சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.கீழப்பழூவூர் மற்றும் மேலப்பழுவூர் ஆகிய இடங்களில் இரு சக்கர வாகனங்கள் திருடிய வழக்கில், தீவிர விசாரணை மேற்கொண்டு, எதிரிகளான பாலகுமார் (37), மற்றும் அஜித்(24) ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.இதில் மேற்கண்ட குற்றவாளிகளை கைது செய்ய, உதவி புரிந்து, மெச்ச தகுந்த பணி செய்தமைக்காக, கீழப்பழுவூர் காவல் ஆய்வாளர் சகாய அன்பரசு, உதவி ஆய்வாளர்கள் ராஜவேல்(க்ரைம் டீம்),ராஜசேகர், சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ், முதல் நிலை காவலர்கள் அருள் மணிகண்டன், குணா, செந்தில் முருகன், காவலர்கள் ஆரோக்கியராஜ், அந்தோணி ராஜ், அப்துல் ரகுமான் ஆகியோரை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.