3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமுகன் கைது!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியை சேர்ந்த ஒருவர் தனது 3 வயது பெண் குழந்தையை அங்கன்வாடி மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, தொழிலாளியான குமரன் என்ற உத்தமநாதன் (வயது 40) அங்கு வந்தார். அந்த குழந்தையை தான் அங்கன்வாடி மையத்தில் கொண்டுபோய் விடுவதாக கூறி குழந்தையை தூக்கிச் சென்றார். இந்தநிலையில் குழந்தையின் தந்தை சிறிது நேரம் கழித்து அங்கன்வாடிக்கு சென்றார். அங்கு குழந்தை இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்தவர்களிடம், உத்தமநாதனிடம் குழந்தையை கொடுத்ததாக கூறி இருக்கிறார். எனவே அக்கம்பக்கத்தினர் இணைந்து குழந்தையை தேடினார்கள்.அங்கன்வாடி மையம் அருகே உள்ள ஊருணி கரை பகுதியில் தேடியபோது, அங்கு ஒரு ஓரத்தில் மயங்கிய நிலையில் குழந்தை கிடந்தது. இதைக்கண்டு எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் குழந்தையை, கடலாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதல் உதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்ததும் கடலாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, குழந்தையை அங்கன்வாடி மையத்துக்கு கொண்டு சென்றுவிடாமல் ஊருணி கரைக்கு தூக்கிச் சென்று உத்தமநாதன் பாலியல் தொல்லை கொடுத்ததும், இந்த கொடுமையால் குழந்தை மயக்கம் அடைந்ததும், பின்னர் அவர் குழந்தையை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடியதும் தெரியவந்தது. எனவே போலீசார் வழக்குப்பதிவு செய்து, உத்தமநாதனை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *