புளிச்சமாவுப் பொறுக்கி
பாலமுரளிவர்மன்
புளிச்சமாவுப் பொறுக்கியின் பொச்செரிச்சலைத்
தொடர்ந்து பலரும்
ஆகா!,அவரே சொல்லிவிட்டார் நாமும் அறிவுசீவி தானே என்று தம் பங்குக்கு அந்த சுவற்றில் முதுகுத்தேய்க்கத் தொடங்கிவிட்டனர்..
புளிச்சமாவுப் பொறுக்கிக்கு
மஞ்ஞுமெல் படத்தின் வசன வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் இதே படத்தைப் பற்றி என்ன எழுதியிருப்பார் என்பதை நினைக்கும்போதே குபீர்ச்சிரிப்பு கொப்பளிக்கிறது..
வசனம் எழுதும் வாய்ப்பு கூட வேணாம்..
அவருக்கு குறிப்பிட்ட தொகை கொடுத்து உங்க பேரை மட்டும் போட்டுக்கொள்கிறோம் என்று கேட்டிருந்தாலே பி ஆர் ஓ வேலையையும் சேர்த்துப் பார்த்திருப்பார்.
மேற்படி இலக்கியப்புடுங்கி எழுதிக்கெடுத்த
சிந்துசமவெளி,,
வெந்து தணிந்தது காடு போன்ற காவியங்களை விட எந்த வகையில் குறைந்துவிட்டது
மஞ்ஞுமெல் பாய்ஸ்.?
உழைக்கும் இளைஞர்கள் தங்களின் ஆசுவாசத்துக்காக ஒன்று கூடிக் களிப்பதை இழிவாக திரிப்பது சனாதனப்பொறுக்கி மனநிலை..
அது தெரியாமல் நாமும் அறிவுசீவி தானே என்ற நினைவோடு
படத்தின் தன்மையை மிகவும் தட்டையாக உள்வாங்கிக்கொண்டு தங்களது மூளைப்பிதுக்கலை சிலர் வெளிப்படுத்துகிறார்கள்.
அவர்களை பொறுத்தளவில் நெளிதல் சுழிதல் பிழிதல் பொழிதல் என திரைக்கதைக்கு அவர்களே இலக்கணம் வைத்துக்கொண்டு அதன்படி அளக்கிறார்கள்…
நடிப்பு எனும் பாவனை குறித்த அளவுகோலும் இவர்கள் அளவில் வேறானது.
Acting is just behaving…
அதுதான் எப்போதுமே நல்ல
கலைஞனின் சிறந்த வெளிப்பாடு..
குட்டனாக நடித்த சௌபீன் ஷாகிர் முதல் அனைவரும் இந்த படத்தில்
Character behaviour ல் அழகாக அளவாக வெளிப்பட்டுள்ளனர்..
குடிகாரர்களாக நடிப்பது வாழ்வில் அறிவுசீவியாக நடிப்பதை விட கடினமானது..
குடிப்பொறுக்கிகளாக நோயுற்ற கண்களுக்கு எரிச்சலூட்டுகிறார்கள் என்பதும் கூட அக் கலைஞர்களின் மகத்தான வெற்றிதான்…
குடிப்பொறுக்கிகளாகவே இருந்தாலும் அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறது.
அதை பதிவு செய்வதற்கு படைப்பாளிக்கு கடமையும் உரிமையும் இருக்கிறது…
தான் மட்டுமே அறிவுசீவி என கருதித்திரியும் சிலருக்கும்
தன் பொருட்டு நட்பையும்
நட்பறத்தையும்
கொன்றுக் கொழுத்த பலருக்கும்
எரிச்சல் வருகிறதெனில்
அதுவும் கூட மஞ்ஞுமெல் நண்பர்களின் வெற்றி தான்…
- பாலமுரளிவர்மன்