உடையார்பாளையம் பேரூராட்சியில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்
அரியலூர் ஜூன்-2;
அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றியம்,உடையார்பாளையம் பேரூராட்சியில் கழகத் தலைவர் மாண்புமிகு முதலைமைச்சர் தளபதியார் அவர்களின் உத்தரவிற்கினங்க, ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றியம் உடையார்பாளையம் பேரூர் கழக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.இதில் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் முகமதுபாருக் வரவேற்புரையயும் , நிறைவாக இளைஞரணி துணை அமைப்பாளர் சக்திவேல் நன்றியுரையும் வழங்கினார்கள்.இதில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கசொக கண்ணன் மற்றும் தலைமை கழக பேச்சாளர் ஆவடி பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு திராவிட மாடல அரசின் “ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” சாதனை குறித்து சிறப்புரையாற்றினார்கள்.இதில் பேரூராட்சி மன்றத் தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார், ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் தன சேகர், பொதுக்குழு உறுப்பினர் ஷாஜகான்,தேவாமங்கலம் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கல்யாணசுந்தரம், பிளிச்சிக்குடி அண்ணாதுரை,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜன், நிர்வாகிகள் ரஞ்சித் குமார், துருவேந்திரன், தங்கராசு மற்றும் மாவட்ட, ஒன்றிய,பேரூர்,கிளை கழகத் தோழர்கள், பொதுமக்கள் என பெரும் திரளாக கலந்துகொண்டனர்.