ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த மதுபான கொள்கையில் முறைகேடு; 17ம் தேதி கோர்ட் விசாரணை!
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச் சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு டெல்லி கவர்னர் பரிந்துரை செய்தார். ஆனால் அந்த கொள்கை ரத்து செய்யப்பட்டது.இந்தவிவகாரத்தில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதுதொடர்பாக விசாரணைக்கு வருமாறு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அதனை அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்தார். இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் அமலாக்கத் துறைக்கு எழுதிய கடிதத்தில், இந்த சம்மன்கள் சட்டவிரோதமானது. அரசியல் உள்நோக்கம் கொண்டது. நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவிடாமல் தடுக்கும் நோக்கில் இந்த சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு இருந்தார். இந்தநிலையில் இது தொடர்பாக அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவால் மீது புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டு திவ்யா மல்ஹோத்ரா, இந்த வழக்கு விசாரணைக்காக அரவிந்த் கெஜ்ரிவால், வருகிற 17-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.