ஜெயங்கொண்டம் ஒன்றியம் கங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயிலில் உழவாரப்பணி – விழிப்புணர்வு திருவிழா.
அரியலூர், ஜூலை.20-
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் உழவாரப்பணி விழிப்புணர்வு திருவிழா நடைபெற்றது. இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் நிறுவனர் பகவத் சேவாரத்னா சிவதிரு ச.கணேசன், அவர்கள் தலைமையில் உயர்ந்தோர்களின் உத்தமர் திருப்பணி, உழவாரத் திருப்பனியே! என்று தமிழ்நாடு முழுவதும், பிரதி மாதம்4 வது, ஞாயிற்றுக்கிழமை பழந்திரு கோயில்களை சுத்தம் செய்தல், பாதுகாப்பதே! ஒரே நோக்கம் மற்றும் தலையாயக் கடமையாக, ஆன்மீக இறைப்பணி மன்றம் செயல்படுத்திக் கொண்டு வருகிறது. அதன் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சியில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மூத்த இளவரசர் ஸ்ரீபாபாஜி ராஜா போன்ஸ்லே, அவர்கள் நிகழ்ச்சியினை நந்திக்கொடி அசைத்து துவக்கி வைத்தார். தஞ்சை
சுற்றுலாத்துறை அலுவலர் கே.நெல்சன், அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். நிகழ்ச்சியினை தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களாக அழகிய தஞ்சை திட்ட இயக்குனர் ஆடிட்டர் ஆர். ரவிச்சந்திரன், அழகிய தஞ்சை திட்ட பொருளாளர் பி.ஜெய்சங்கர், கண்புரை அறுவை சிகிச்சை முகாம் தலைவர் லயன்ஸ் ஆர்.கே.சண்முகம், மகிமைபுரம் மாடர்ன் கல்வி குழுமம் தாளாளர், லயன்ஸ் மாவட்ட தலைவர், பொறியாளர் லயன்ஸ் எம்.கே. ஆர்.சுரேஷ், ஆண்டிமடம் சங்க மண்டல தலைவர் எம்ஜேஎஸ் லயன்ஸ் பி. ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் லயன்ஸ் சங்க தலைவர் லயன்ஸ் பி.ஆர். ஆனந்தகுமார், மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பலர் கௌரவ அழைப்பாளர்களாக கலந்துகொண்டு உழவாரப்பணி மற்றும் விழிப்புணர்வு திருவீதி உலாவினை சிறப்பித்தார்கள். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு பணியை வலியுறுத்தும் வகையில் துணிப்பை வழங்குதல், மற்றும் ஆன்மீக கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்றது.