தனிமையில் உல்லாசம்; பிளஸ்-1 மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது!!!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. பிளஸ்-1 படித்து வருகிறார். இவரும், இவரது வீட்டின் அருகே வசிக்கும் உறவினரான 19 வயது எலக்ட்ரீசியனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத போது இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதில் மாணவி கர்ப்பம் ஆனார். இதை வெளியில் தெரியாதவாறு பார்த்துக்கொண்ட மாணவி பிளஸ்-1 அரையாண்டு தேர்வு எழுதி உள்ளார். இந்தநிலையில் கடந்த 25-ம்தேதி வீட்டிலேயே கழிவறைக்கு சென்ற போது மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து கேட்டபோது இதற்கு எலக்ட்ரீசியன்தான் காரணம் என மாணவி தெரிவித்துள்ளார். மேலும் மாணவிக்கு ரத்தப்போக்கு அதிகமானதால் விஷயம் வெளியே தெரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வந்தவாசி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எலக்ட்ரீஷனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.