*விவசாயிகள் கவலை*.
‘முருங்கைக்காய் விலைகுறைந்தது, “
விவசாயிகள் சோகம்
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் தற்போது முருங்கைகாய் கொத்துக்கொத்தாய் காய்க்கும் சீசன் தொடங்கி உள்ளது.
பல இடங்களில் திரும்புகின்ற திசைகளில் எல்லாம் பூவும் ,பிஞ்சுமாக முருங்கை மரம் காட்சி தருகிறது. ஆனால் விலை இல்லை.
ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.4-க்கு தான் கமிஷன் கடையில் தற்போது கொள்முதல் செய்கின்றனர்.
தினசரி 500 கிலோ முதல் 800 கிலோ வரை உடன்குடியில் இருந்த வெளியூர்களுக்கு ஏற்றுமதி ஆகுகிறது.
மதுரை, சென்னை போன்ற வெளியூர்களுக்கு தினசரி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.40 மற்றும் ரூ.50 என்று விலை இருந்தது. தற்போது விலை கிடுகிடு என குறைந்து விட்டது.
முருங்கைக்காய் நன்றாக காய்க்கும் நேரத்தில் விலை இல்லையே என்று விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இது பற்றி விவசாயி ஒருவர் கூறியதாவது:-
தற்போது முருங்கை காய்க்கு விலை இல்லை. ஒரு கிலோ ரூ.4-க்கு கொள்முதல் செய்கின்றனர்.
தற்போது கோடை காலமாக இருப்பதால், மக்கள் அதிகமாக ஆடு, மாடு, கோழிகளை தான் வாங்கி சாப்பிடுகிறார்கள்.
அதனால் சைவ பொருளான முருங்கைக்காய்க்கு விலை இல்லை. ஆனால் இப்போது முருங்கைமரத்தை பார்த்தால் பூவும், பிஞ்சுமாக தொங்கு கிறது.
முருங்கைக் காயை மரத்தில் பறிக்கும் கூலி கூட கட்டுபடி ஆகவில்லை.
அதனால் பலர் முருங்கைக்காய் பறிக்காமல் மரத்தில் அப்படியே போட்டு விட்டனர் என்று கூறினார்.