பெரியவளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ஸ்மார்ட் வகுப்பு அறை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
பெரியவளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ஸ்மார்ட் வகுப்பு அறை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
அரியலூர் மாவட்டம்ஜெயங் கொண்டம் சட்டமன்ற தொகுதி, பெரியவளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 2லட்சம் மதிப்பீட்டில் (ஸ்மார்ட் கிளாஸ்) கணினி வகுப்பு அறை அமைக்கப்பட்டதனை சட்ட மன்ற உறுப்பினர் கண்ணன் துவக்கிவைத்தார், தொடர்ந்து மாணவ, மாணவிகள் சாப்பிடும் மதிய உணவையும்மற்றும் நியாய விலைக்கடையினையும், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆய்வு செய்தார். அப்போது தலைமை ஆசிரியர் மரியதங்கம்,ஊராட்சி மன்றதலைவர்வேம்பு சுப்பிரமணியன், மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வேல்முருகன்