நடத்தையில் சந்தேகம்; மனைவியை சரமாரியாக வெட்டிய கணவர்!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சாலைத்தெருவை சேர்ந்தவர் அரபுஅலி (வயது 30). இவர், வேடசந்தூரில் உள்ள மாட்டு இறைச்சி கடையில் கறி வெட்டும் தொழிலாளியாக உள்ளார். அவருடைய மனைவி ஜோதிலட்சுமி என்ற ஜாஸ்மின். இவர், பூ கட்டும் வேலை செய்து வருகிறார். இவர்கள் 2 பேரும் காதலித்து, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 4 வயதில் மகன் இருக்கிறான். இந்தநிலையில் தனது காதல் மனைவி ஜாஸ்மின் மீது அரபுஅலிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. வழக்கம்போல் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டபோது யாரிடம் செல்போனில் பேசினாய் என்றும், அதனை தன்னிடம் தருமாறு கூறியும் அரபுஅலி வாக்குவாதம் செய்தார். மேலும் ஆத்திரம் அடைந்த அவர், தான் வைத்திருந்த இறைச்சி வெட்டும் அரிவாளால் ஜாஸ்மினை சரமாரியாக வெட்டினார். இதில் நிலைகுலைந்த ஜாஸ்மின் ரத்தவெள்ளத்தில் சாய்ந்தார். இதையடுத்து அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *