“நான் விரும்பும் பெண்ணை நீ காதலிப்பதா?”;வாலிபர் தனது நண்பனை துப்பாய்க்கியால் சுட்டு கொலை!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த இக்கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ஆதர்ஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் பப்லு. அவரது நண்பர் ஆர்யன் பண்டிட். இவர்கள் இருவரும் மிகவும் உயிருக்குயிராக பழகி வந்தனர். இந்த நிலையில் பப்லு ஒரு பெண்ணை விரும்பினார். அதே பெண்ணை ஆர்யன் பண்டிட்டும் காதலித்தார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது. இவர்கள் இருவரும் அவ்வப்போது மோதிக்கொண்டனர். இந்த நிலையில் ஆர்யன் பண்டிட் தனது புல்லட் மோட்டார் சைக்கிளில் வந்து சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த பப்லு இந்த 1 காதல் விவகாரம் தொடர்பாக ஆர்யனுடன் தகராறு செய்தார். அப்போது ஆர்யனை அவர் கன்னத்தில் ‘பளார் பளார் என சரமாரியாக அடித்தார். பின்னர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை சுட்டார். இதில் ஆர்யன் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. உடனே அங்கிருந்து பப்லு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டார். இதற்கிடையே அந்த 5 வழியாக ரோந்து சுற்றி வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் – உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆர்யனை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அலிகார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.