தி மு க கடலூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்.
கடலூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நெய்வேலி என்எல்சி தொமுச வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கடலூர் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் நந்தகோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் கலந்து கொண்டு பேசுகையில்,
டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா திருவாரூரில் வருகின்ற ஜுன் மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் கடலூர் மேற்கு மாவட்ட சார்பில் கழக நிர்வாகிகள் திராளக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும், கடலூர் மேற்கு மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஓவ்வெரு தொகுதிக்கும் புதிதாக ஐம்பதாயிரம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்ட சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், நெய்வேலி நகர செயலாளர் பக்கிரி சாமி, மாவட்ட பொருளாளர் தண்டபாணி, பண்ருட்டி ஒன்றிய குழு தலைவர் சபா பாலமுருகன், என்எல்சி தொமுச பொதுச்செயலாளர் பாரி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி, மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.