சிலிண்டர் விலை அதிரடி உயர்வு; வர்த்தகர்கள் அதிர்ச்சி!
வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தற்போது உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி ரூ.1,924.50க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டரின் விலை தற்போது ரூ.12.50 உயர்ந்து ரூ.1937 ஆக அதிகரித்துள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.918.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு காரணமாக வர்த்தகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் இந்த விலையேற்றத்தால் உணவு பொருட்களின் விலை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.