சிபிஐ கட்சியினர் மே தினத்தில் கிராமப்புரங்களில் கட்சி கொடிஏற்றி உருதிமொழி
திருமானூர் ஒன்றியத்தில் சிபிஐ கட்சியினர் மே தினத்தில் கிராமப்புரங்களில்
கட்சி கொடிஏற்றி உருதிமொழி ஏற்று இனிப்புவழங்கி கொண்டாட்டம்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு சார்பாக கிராமப்புறங்களில் மே தினத்தை முன்னிட்டு கட்சி கொடியும் தொழிலாளர்கள் கொடியும் ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் திருமானூர் ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் கலியபெருமாள் முன்னிலையிலும் மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம் திருமானூர் .திருவேங்கனூர். சுள்ளங்குடி. விழுப்பணங் குறிச்சி. மற்றும் கோவிலூர் ஆகிய பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடியையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்கள் கொடியையும் ஏற்றி வைத்து உறுதிமொழி ஏற்று இனிப்பு வழங்கி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை கொண்டாடினர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் ஜீவா நன்றி கூறினார் இதனை தொடர்ந்து மாலை நடைபெற்ற அரியலூர் பொதுக்கூட்டத்திற்கு பேரணியாக சென்று சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் கட்சித் தொண்டர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிகள் மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம் கூறுகையில் தொழிலாளர்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் பெற வேண்டும். எளியவர்கள் ஏற்றும் பெற வேண்டும். சுரண்டலும் வறண்டலும் தொழில் அல்ல என்ற தெளிவு வேண்டும். உழைத்து பிழைப்பவர்கள் மதிக்கப்பட வேண்டும் .ஏய்த்து பிழைப்பவர்கள்கள் ஒதுக்கப்பட வேண்டும் .உத்தம உழைப்பாளர்கள் மதிக்கப்பட வேண்டும். இந்த தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.