வருகிற 20-ம் தேதி காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்; கே.எஸ்.அழகிரி தலைமையில் நடகிறது!

வருகிற சனிக்கிழமை (20.01.2024) காலை 10.00 மணியளவில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ளது. இக்கூடத்தில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் அஜோய்குமார், Ex.MP கலந்து கொள்கிறார். பின்னர் காலை 10.30 மணியளவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்க உள்ளார். அதனை தொடர்ந்து மாலை 4 மணியளவில் தமிழ்நாடு பாராளுமன்ற தேர்தல் குழு கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் அஜோய்குமார் Ex.MP, ஸ்கிரீனிங் கமிட்டி தலைவர் ஹரிஷ் சவுதிரி, உறுப்பினர்கள் விஸ்வஜித் கடம், ஜிக்னேஷ் மேவாணி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *