“ஜோதிடத்தில் ,லக்னத்துக்கும் ராசிக்கும் என்ன வித்தியாசம்..?”

“ஜோதிடத்தில் ,லக்னத்துக்கும் ராசிக்கும் என்ன வித்தியாசம்..?”

லக்னப்படியும் ராசிப்படியும் ஒரு கிரகம் ஜாதகருக்கு நன்மைகளை அளிக்கும் தன்மை கொண்டதாக இருந்து, அதன் தசை நடக்கும்போது பிரமாதமான அதிர்ஷ்ட பலன்களை அளிக்கும். லக்னப்படி நன்மையும், ராசிப்படி தீமையும் அளிக்க அந்தக் கிரகம் விதிக்கப்பட்டிருந்தால், அதன் தசையில் 60% நன்மைகளே வழங்கும்.”ராசிகள்”ஜாதகக் கட்டத்தில் ‘லக்னம்’ என்றும் ‘ராசி’ என்றும் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்திருக்கிறோம். ராசிப்படி பலன்கள் பார்ப்பதால்தான், அதற்கு ராசிபலன் என்றே பெயர் ஏற்பட்டது. இதேபோன்று, லக்னப்படியும் சிலர் பலன் சொல்லிவருகிறார்கள். ‘ராசி என்றால் என்ன? லக்னம் என்றால் என்ன?’

” 360 டிகிரி” அளவுகொண்ட வான்வெளியை “12”சமபங்குகளாக, அதாவது தலா ’30டிகிரி அளவுள்ள பகுதிகளாக நமது ஞானிகள் பிரித்துள்ளனர். இவற்றுக்கு மேஷம், ரிஷபம், மிதுனம் எனப் *12* பெயர்களை வைத்துள்ளனர்.

ஒருவர் பிறந்த நேரத்தில் பூமியின் கிழக்கு வானில் எந்த ராசி உதயமானதோ… அதாவது, பூமியின் சுழற்சிப் பாதையின்படி எந்த ராசியில் பூமி சென்றுகொண்டிருக்கிறதோ, அந்த ராசி வீடே ஒரு மனிதனின் லக்னம் எனப்படுகிறது.

“ராசி”லக்னம் மட்டுமே, ஒருவருடைய ஆளுமைத்திறன், சிந்தனை, செயல், அதிர்ஷ்டம், அவரது முழுவாழ்க்கையிலும் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளுக்கு ஆதாரமாக விளங்குகிறது. ராசி என்பது லக்னத்துக்கு துணை செய்யும் ஓர் அமைப்புதான்.

இந்த லக்னம் என்பது தோராயமாக இரண்டு மணிக்கு ஒருமுறை மாறிவரும். உதாரணமாக, சித்திரை மாதத்தில் சூரியன் ‘மேஷ ராசி’யில் சஞ்சரிப்பார். சித்திரை மாதம் சூரிய உதயத்தில் பிறப்பவர்களின் லக்னம் மேஷ லக்னமாக இருக்கும். அடுத்த இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு பிறப்பவர்களுக்கு, ரிஷப லக்னமாக இருக்கும். இப்படி லக்னம் தோராயமாக இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை மாறிக்கொண்டேயிருக்கும்.

ஆனி மாதம் என்று எடுத்துக்கொண்டால், சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். சூரிய உதயத்தின்போது பிறப்பவர்களின் லக்னம் மிதுன லக்னமாக இருக்கும்.

லக்னமும் ராசியும் இணைந்த தண்டவாளங்கள் போன்றவைதான். இரண்டையும் இணைத்துத்தான் பலன் சொல்ல முடியும். சொல்லவும் வேண்டும். அப்போதுதான், அது முறையான ஜோதிடப் பலன்களாக இருக்கும்.

ஏனெனில், லக்னப்படி ஒரு கிரகம், ஒருவருக்கு கெட்ட பலன் அளிப்பதாக இருந்தாலும், அவர் பிறந்த ராசிப்படி அந்தக் கிரகம் யோகக்கிரகமாக இருந்தால் முழுமையான கெடுபலனைச் செய்யாது.

“கிரகங்கள்//

லக்னப்படியும் ராசிப்படியும் ஒரு கிரகம் ஜாதகருக்கு நன்மைகளை அளிக்கும் தன்மை கொண்டதாக இருந்து, அதன் தசை நடக்கும்போது, அந்தக் கிரகத்தின் தசை பிரமாதமான அதிர்ஷ்ட பலன்களை அளிக்கும். லக்னப்படி நன்மையும், ராசிப்படி தீமையும் அளிக்க அந்தக் கிரகம் விதிக்கப்பட்டிருந்தால், அதன் தசையில் 60 சதவிகித நன்மைகளே வழங்கும்.

லக்னம், ராசி இரண்டின்படியும் ஒரு கிரகம் ஜாதகருக்கு தீமை செய்யவேண்டிய அமைப்பு இருந்தால், நிச்சயம் அதன் தசையில் கெடுபலன்கள்தான் நடக்கும் என்று கண்களை மூடிக்கொண்டு பலன் சொல்லிவிடலாம்.

நேரத்தை அளவிடும் துல்லியமான கருவிகள் கண்டுபிடிக்கப்படாத முற்காலத்தில் அல்லது நேரக் கருவிகள் பாமர மக்கள் உட்பட அனைவரிடமும் போய்ச் சேராத அந்தக் காலத்தில், சமுதாயத்தின் மேம்பட்ட நிலையினரான அரச குடும்பத்தினர், மந்திரிகள், தளபதிகள், பணக்காரர்கள் போன்ற உயர் அந்தஸ்து கொண்டவர்களுக்கு மட்டுமே குழந்தை பிறந்த நேரக் கணக்கை கணித்து, லக்னப்படி துல்லியமாகப் பலன் பார்க்கப்பட்டது.

சமுதாயத்தின் மற்ற பிரிவினருக்கு ஒருநாள் முழுவதும் ஒரு நட்சத்திரமும், இரண்டு நாள்கள் வரை ஒருவரின் ராசியும் இருக்கும் காரணத்தால், ராசி அல்லது நட்சத்திரத்தை வைத்தே தோராயமான பலன்கள் ஜோதிடர்களால் சொல்லப்பட்டன. அதன்படியே, தற்போது வழிவழியாக வரும் மரபுப்படி பெரும்பாலானவர்களுக்கு பொதுப்பலன்களாக ராசிப்படி பலன்கள் சொல்லப்படுகின்றன.
தற்போது, கடிகாரங்கள் எல்லா இடங்களிலும் புழக்கத்துக்கு வந்துவிட்டதாலும், மக்களிடமும் குழந்தை பிறக்கும் சரியான நேரம் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதாலும், லக்னப்படி பலன்கள் சொல்லத் தொடங்கியுள்ளார்கள். சிலருக்கு லக்னமும் ராசியும் ஒன்றாக அமைந்திருக்கும். அவர்களுக்கு விதி ஸ்தானமும் மதி ஸ்தானமும் ஒன்றாக இருக்கும். சிலருக்கு லக்னமும் ராசியும் நட்பு வீடுகளாக அமைந்திருக்கும்.

“கிரகம்”லக்னாதிபதிக்கு ராசி பகைவீடாக இருந்தால், அப்படிப்பட்டவர்களுக்கு சில நேரங்களில் உடலும் மனமும் வேறு வேறு திசைகளில் பயணிக்கும். உதாரணமாக, குருவின் ஆதிக்கம் பெற்ற தனுசு லக்ன ஜாதகருக்கு, சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற ரிஷபம் ராசி வீடாக அமைந்தால் என்ன ஆகும்? குரு கொடுப்பதை சுக்கிரன் கெடுப்பாரா? அல்லது சுக்கிரன் கொடுப்பதை குரு தடுப்பாரா?’ எனும் கேள்வி எழுகிறது. இதுபோன்ற சூழலில், எந்தக் கிரகம் வலுவடைந்திருக்கிறதோ அதன் பலன்களே மிகுதியாகக் கிடைக்கும். இவற்றையும் கடந்து, ஜாதகரின் தசா புக்திகளே முக்கியமாக ஒருவரின் வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்கிறது.

லக்னாதிபதிக்கு இணக்கமான திசை என்றால் நற்பலன்களும் பாதகமான திசையென்றால் கெடுபலன்களையும் தரும். இதனால், முக்கியமான நேரங்களில் உடல் உதவிகரமாக இல்லாமல் போகும். இதைத் தவிர்க்க, எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அவரின் லக்னாதிபதிக்குரிய தெய்வத்தை வணங்கிவிட்டு செயல்களில் ஈடுபடுவது நல்லது.

“மேஷம், விருச்சிகம் லக்னக்காரர்கள்”முருகனுடைய ஆலயங்களுக்கும், செவ்வாயின் ஆதிக்கம் மிகுந்த வைத்தீஸ்வரன் கோயிலுக்கும், சென்னை பூந்தமல்லியில் உள்ள வைத்தியநாத சுவாமி ஆலயத்துக்கும் சென்று வணங்கிவருவது சிறப்பு.

“ரிஷபம், துலாம்,

லக்னக்காரர்கள், சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த திருவரங்கம், நவகிரக ஸ்தலங்களில் சுக்கிரனுக்குரிய கஞ்சனூர், சென்னையை அடுத்த மாங்காட்டில் இருக்கும் வெள்ளீஸ்வரரை வணங்கி வந்தால் நல்ல பலன்களை அடையலாம்.

“மிதுனம், கன்னி லக்னக்காரர்கள்”

“புதனின் “அதிதேவதையான மதுரை மீனாட்சியம்மனை வழிபடலாம். நவகிரக தலமான திருவெண்காடு, சென்னை குன்றத்தூர் அருகே இருக்கும் வட திருவெண்காடு சென்று வழிபட்டு நற்பலன்களைப் பெறலாம்.

“கடக லக்னக்காரர்கள்,

, கும்பகோணம் அருகிலுள்ள திங்களூருக்குச் சென்று வழிபடலாம். குன்றத்தூரிலிருக்கும் சோமங்கலம் சோமநாதீஸ்வரரை வணங்குவதும், திருவண்ணாமலை கிரிவலம் செல்வதும் ஜாதகருக்கு சிறப்பான வாழ்வைத் தரும்.

“சிம்ம லக்னக்காரர்கள்,
“சூரியனார்கோயிலுக்குச் சென்று வழிபடலாம். சென்னையில் இருப்பவர்கள் மாதவரம் அருகே உள்ள ‘ஞாயிறு’ என்னும் ஊரிலிருக்கும் சூரியனார் கோயிலுக்குச்சென்று வழிபட்டாலும் சிறப்பான பலன்களைப் பெறலாம். தனுசு, மீனம்,லக்னக்காரர்கள்,

, ஆலங்குடி, தென்குடித்திட்டை, திருச்செந்தூர் ஆகிய குரு ஸ்தலங்களுக்குச் சென்று வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.

“புதன்,மகரம், கும்பம் லக்னக்காரர்கள்”

“சனி பகவானைவழிபடுவதைவிட, சுக்கிரனுக்குரிய கோயிலான, திருவரங்கம்,மாங்காடு, கஞ்சனூர்,ஆகிய இடங்களுக்குச் சென்று வழிபடுவது நல்லது. தானதர்மம் செய்வதும் சிறப்பான பலன்களைத் தரும்”

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *