வடலூர் அருகே கார், பஸ் மோதல்,3 பேர் பலி. 24 பேர் காயம்
வடலூர் அருகே கார், பஸ் மோதல்,3 பேர் பலி. 24 பேர் காயம்
வடலூர் அருகே ராசாக்குப்பம் கிராமத்தில் நேற்று மதியம் தனியார் பஸ் கார் மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒரு மூதாட்டி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலூரில் இருந்து விருதாசலத்திற்கு நேற்று மதியம் 2.15 மணிக்கு தனியார் பஸ் 70 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அதி வேகமாக வந்த இந்த பஸ் வடலூர் அருகே ராசாகுப்பம் கிராமத்தில் வந்த போது , எதிரே வந்த கார், பஸ்மீதும் மோதி சாலையோர வந்த இரு சக்கர வாகனத்தின் மோதி நின்றது.
இதில் மாருதி ஸ்விஃப்ட் காரில்(TN 32 AK 9116,) பயணம் செய்த கடலூர் வெளிசெம்மண்டலத்தை சேர்ந்த அந்தோணிசாமி மனைவி விக்டோரியா 65 ;என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .காரில் பயணம் செய்த கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்த ஞான பிரகாசம் 52 ;அவரது மனைவி குணசீலி 50 ;மகள் ரித்திகாமேரி 10; உறவினர் பொன்னம்மாள் 60; ஆகியோர் பலத்த காயமடைந்து குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த தாமரைச்செல்வன் 23 ;விஜயகுமார் 22 ;ஆகியோர் நெய்வேலியில் சமையல் வேலை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சாத்தப்பாடி சென்று கொண்டிருந்தவர்கள் அதிவேகமாக வந்த பஸ் காரின் மீது மோதியதை பார்த்துவிட்டு சாலை ஓரம் மோட்டார் சைக்கிள் நிறுத்திவிட்டு நின்றிருந்தனர். இவர்கள் மீதும் பஸ் மோதியதில் தாமரைச்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விஜயகுமார் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார் .இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த ஊமங்கலம் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி ராஜேஸ்வரி 30 ;வன்னியர்பாளையம் கோவிந்தராஜ் மகன் ஜெய்சங்கர் 53; காரைக்கால் தனசேகர் மகள் அர்ச்சனா 20; பச்சை பெருமாள் கோயில் குமாரலிங்கம் மகள் துர்கா தேவி 31; விருதாசலம் ஜெயராமன் மகன் மணிகண்டன் 42; வளர்மதி 33; குமுதா 45; மனோரஞ்சிதம் 67; சக்திவேல் 31; மாலதி 32; உட்பட 24 பேர் காயமடைந்து குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் 15 பேர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.