உப்பு விலை திடீர் உயர்வு!
கடந்த மாதம் பெய்த அதிகனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பளங்கள் கடுமையாக சேதமடைந்தன. உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 6 லட்சம் டன் உப்பு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன என கூறப்படுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பளங்களை சீரமைத்து அடுத்த சீசன் உப்பு உற்பத்திக்கு தயார்படுத்தும் பணிகளை உப்பள உரிமையாளர்கள் தொடங்கி உள்ளனர். தற்போது தூத்துக்குடியில் உப்பு இருப்பு குறைவாக இருப்பதால், அவற்றின் விலை அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த மாதம் ஒரு டன் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரத்து 500 வரை விற்பனையான உப்பு தற்போது விலை உயர்ந்து ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரத்து 500 வரையிலும் விற்பனையாகிறது.