அ.தி.மு.க. தோல்விக்கு இதுதான் காரணம்; செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்!

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் அ.தி.மு.க. தொண்டர்களின் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசுகையில்,

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை உருவாக்கியபோது அடிப்படை தொண்டர்களும் பொதுச்செயலாளர் ஆகும் வகையில் பல்வேறு சட்டவிதிகளை வகுத்தார். அவற்றை தகர்த்து அடிப்படை தொண்டர்களின் உரிமையை பறித்து எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராகி உள்ளார். அதை எதிர்த்து தொண்டர்கள் சார்பில் மீட்புக்குழு கூட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்துகிறோம்.

இரு அணிகளாக செயல்பட்டு ஓட்டுக்களை உடைப்பதால் தான் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியவில்லை. எடப்பாடி பழனிசாமி முதல்வராகி பொதுச்செயலாளரான பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளார். ஆனால் அதைப்பற்றி கவலை இல்லாமல் தனக்கு தானே பொதுச்செயலாளர் பதவியை சூட்டி மோசமான சூழலை ஏற்படுத்தி விட்டார் என்றார்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *