“தனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசு பள்ளிகள்”
சென்னை: தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், இதில் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவிகிதம் மிக சிறப்பாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.. அதன்படி இந்தாண்டு +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை தேர்வு வரை நடைபெற்றது.அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியானது. dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய தளங்களில் சென்று மாணவர்கள் தேர்வு முடிவுகளைப் பார்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.. அதில் உங்கள் ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதியைக் கொடுத்து செக் செய்து கொள்ளலாம்.. மேலும், EMIS இணையதளத்திலும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது.