“12 வயது சிறுமி 4 மாத கர்ப்பம்” 29 வயது வாலிபர் மீது போக்சோ பாய்ந்தது!

மராட்டிய மாநிலம் தானே பன்வெல் பகுதியில் சமீபத்தில் அந்த பகுதியை சேர்ந்த உள்ளூர் டாக்டர் ஒருவர் கணக்கெடுப்பு பணி மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் 12 வயதே ஆன சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதில் சிறுமி சத்தாரா மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது. அதே பகுதியை சேர்ந்த 29 வயது நபர் ஒருவர் சிறுமியை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். பின்னர் அவர் சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *