வடலூரில்வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில்,74-வது குடியரசு தின விழா

வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி குடியரசு தினவிழாவில் ஓ.பி.ஆர். கல்வி
நிறுவனங்களின் தாளாளர் டாக்டர்.செல்வராஜ்  தலைமையேற்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து தேசிய மாணவர்படை, செஞ்சிலுவை சங்கம், நாட்டு நல பணித்திட்டம் ஆகிய மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையும் ஏற்றுக் கொண்டு குடியரசு தினசிறப்புரையாற்றினார்.
விழாவிற்கு வருகை தந்த பெற்றோர் ஆசிரிய கழகத் தலைவர் ராமானுஜம்
அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர்
பூர்ணிமாதேவி வரவேற்புரையாற்றினார். மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி
நடைபெற்றது. தமிழாசிரியர்கள் குடியரசு தின உரையாற்றினார்கள்.பழனிவேல் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். விழாவில் மேல்நிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர், உதவித் தலைமை ஆசிரியர் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *