பாரதியஜனதாகட்சி,ஆட்சிக்குவந்தால்முஸ்லிம் ஒதுக்கீடுரத்து: அமித்ஷா திட்டவட்டம்.
பாரதியஜனதாகட்சி,ஆட்சிக்குவந்தால்முஸ்லிம் ஒதுக்கீடுரத்து: அமித்ஷா திட்டவட்டம்.
ஹைதராபாத்
தெலுங்கானாவில் பா.ஜ., ஆட்சி அமைத்தால், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும், என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.
தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத் ராஷ்டிர சமிதி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள செவலா நகரில் பா.ஜ., சார்பில் ‘சங்கல்ப் சபா’ என்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா பேசியதாவது:
தெலுங்கானாவில் போலீஸ் மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் பெரிய அரசியல் நடக்கிறது.
மத அடிப்படையிலான இட ஒதுக்கீடுகள், நம் நாட்டு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானவை.
இங்கு பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, பட்டியல் ஜாதி, பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான உரிமையை அளிக்கும்.
ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் ஓவைசியின் திட்டங்கள் தெலுங்கானாவில் அமல்படுத்தப்படுகின்றன.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தெலுங்கானா அரசு ஏழை எளிய மக்களுக்காக நடத்தப்படும் ஓவைசிக்காக நடத்தப்படாது.
*இவ்வாறு அவர் பேசினார்.*