“பச்சை நிழல் பந்தல்.. சென்னையில் பசுமை பந்தல்”
“பச்சை நிழல் பந்தல்.. சென்னையில் பசுமை பந்தல்” எங்கெங்கே வருது தெரியுமா? எப்போ வருது தெரியுமா?
சென்னை: கொதிக்கும் வெப்பத்தை தணிக்கும் வகையில், சென்னையில் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து முக்கிய தகவலை சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்திரி வெயில் தற்போதுதான் ஆரம்பித்துள்ளது. ஆனால், கடந்த மார்ச் மாதத்திலிருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறதுகாலை முதல் மாலை வரை சாலைகளில் நடமாடவே பொதுமக்கள் பயப்படுகிறார்கள்.. அந்த அளவுக்கு வெயில் கொளுத்துகிறது.. அதனால்தான், பகல்நேரங்களில் தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என்று தமிழக சுகாதார துறையும், மருத்துவர்களும் தொடர்ந்து அறிவுறுத்தியபடியே உள்ளனர்.
வாகன ஓட்டிகள்: இந்நிலையில், வாகன ஓட்டிகளுக்கு நிழல் தர வேண்டும் என்பதற்காக, சென்னை மாநகர சாலைகளில் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது… இதில், முதற்கட்டமாக அண்ணாநகர், அடையாறு, வேப்பேரி, ராயப்பேட்டை உள்ளிட்ட 10 பகுதிகளில் 6 மீட்டர் நீளம் மற்றும் 5.5 மீட்டர் உயரத்தில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது..பகல் நேரங்களில் வெயிலில் சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக கோவை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் மட்டுமே பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சென்னையிலும் இதே திட்டம் கொண்டுவரப்படுகிறது.வாகன ஓட்டிகளை, வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் இந்த பந்தபந்தல்கள் அமைக்கப்பட உள்ளன… இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் சொன்னதாவது: சிக்னல்கள்: “சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகளை வெப்பத்தில் இருந்து காப்பதற்காக 10 சந்திப்புகளில் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட உள்ளன. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை அருகே ராஜா முத்தையா சாலை ஈ.வெ.ரா. பெரியார் சாலை சந்திப்பு, திருமங்கலம் ரவுண்டானா சந்திப்பு, கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை, 3-வது அவென்யூ சந்திப்புகளில் பசுமை நிழல் பந்தல் அமைக்கப்படுகிறது. அதேபோல, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம் சேத்துப்பட்டு சந்திப்பு, அடையாறு எஸ்.பி.சாலை-மேற்கு அவென்யூ சாலை சந்திப்பு, திருவான்மியூர் பழைய மாமல்லபுரம் சாலை உள்ளிட்ட 10 இடங்களில் பசுமை நிழற்பந்தல்கள் அமைக்கப்பட உள்ளன.இன்னும் 3 நாட்களில் இதனை அமைக்க முடிவு செய்திருக்கிறோம்.. சென்னை மாநகராட்சி பகுதியில் பொதுமக்களளின் வசதிக்காக 199 இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.. இனிவரும் நாட்களிலும் தொடர்ந்து வழங்கப்படும்” என்றார். கமிஷனர் ராதாகிருஷ்ணன் முன்னெடுத்துள்ள இந்த பசுமை நிழல் பந்தல் ஏற்பாடுகளுக்கு, சென்னைவாசிகள் குறிப்பாக வாகன ஓட்டிகள் பெரும் வரவேற்பை தெரிவித்து வருகிறார்கள்.