நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என மத்திய அமைச்சர் கூறிய பதில் துரதிர்ஷ்டவசமானது- முதலமைச்சர் .
தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த வலியுறுத்தி மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அதில் காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களை இணைக்கும் சென்னை – ராணிப்பேட்டை இடையேயான தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும் இதனால் சமீபத்தில் இந்த மாவட்டங்களுக்குச் செல்லும்போது தான் ரயிலில் பயணிக்க நேரிட்டதாகும் தெரிவித்துள்ளார்.
இந்த சாலையை மேம்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் எம்.பி. தயாநிதி மாறன் வலியுறுத்தியபோது நீங்கள் அளித்த உறுதியற்ற பதில் வருத்தமளிப்பாதாக கூறியுள்ளார். மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்கத் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், ஆனால் நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என மத்திய அமைச்சர் கூறிய பதில் துரதிர்ஷ்டவசமானது எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சாலைப் பணிகளை விரைந்து முடிக்கத் தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பும் வழங்கி வருவதாகவும்,சென்னை – ராணிப்பேட்டை இடையேயான தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், ஸ்ரீபெரும்புதூர் – வாலாஜாபேட்டை 4 வழிச்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதற்கு ஒப்பந்ததாரர்களுக்கும் நெடுஞ்சாலைத்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையே காரணம் என தெரிவித்துள்ளார்.